ADDED : ஜூன் 04, 2025 09:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது நடத்தி வரும் போரை நிறுத்தக்கோரி, மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கோவை உக்கடத்தில் நேற்று மாலை நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
கட்சி நிர்வாகிகள், அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்களின் செயலாளர் அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட, 200க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.