ADDED : செப் 27, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
காந்திபுரம்: கோவையில் டெங்கு பரவல் அதிகளவில் இருந்து வருகிறது. பரவலை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறது. மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில், செம்மொழி பூங்காவில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருக்க கூடாது. மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். நீர்சத்து அதிகம் உட்கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ‘மக்கள் பங்களிப்பை தருவோம்; டெங்குவை ஒழிப்போம்’ என உறுதிமொழி எடுத்தனர்.
