UPDATED : செப் 18, 2026 06:11 PM
ADDED : செப் 18, 2026 06:03 PM
செட்டிபாளையம்: செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் உள்ளது, சாந்தி நகர். 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இரு வாரங்களுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த ஒரு குழந்தை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் குணமடைந்தது.
ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு, டெங்கு காய்ச்சல் என பரிசோதனையில் தெரிந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
டெங்கு காய்ச்சலுக்கு தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் உருவாகும் கொசுக்களே காரணம் என்பதால், செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி உடனடியாக கொசு மருந்து அடிக்கச் செய்தார்.
அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் முன் கழிவுநீர், குழிதோண்டி விடப்படுகிறது. இதில் கொசு உற்பத்தியாகி, மாலை நேரத்தில் கொசு பாதிப்பு அதிகமாக உள்ளது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
