ADDED : செப் 18, 2026 05:52 PM
கோவை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், இளம் விஞ்ஞானிகளுக்கான இரண்டு நாள் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
கோவை தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் முகாமில் எட்டு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். கட்டணம் இல்லை; முன்பதிவு அவசியம்.
முகாமில், ஆர்டுயினோ, இ.எஸ்.பி., இயந்திரங்களின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம், வாட்ச் அசெம்பிளிங், தொலைநோக்கி இணைத்தல் உள்ளிட்ட செய்முறை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தொலைநோக்கி மூலம் சூரியனை பார்வையிடும் நிகழ்வு இடம்பெறுகிறது. பங்கேற்க விரும்பும் மாணவர்கள் விவரங்களை, 63835 43676 என்ற எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்த மாணவர்களில், தேர்வு செய்யப்படுவோருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க கோவை மாவட்ட தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
