/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கரை, காரமடை, சூலுார் பெ.நா.பாளையத்தில் டெங்கு
/
மதுக்கரை, காரமடை, சூலுார் பெ.நா.பாளையத்தில் டெங்கு
மதுக்கரை, காரமடை, சூலுார் பெ.நா.பாளையத்தில் டெங்கு
மதுக்கரை, காரமடை, சூலுார் பெ.நா.பாளையத்தில் டெங்கு
ADDED : ஜன 18, 2024 01:36 AM
கோவை : மாவட்டத்தில் நான்கு வட்டாரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த இரு மாதங்களில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்ந்துள்ளது. மாநகராட்சி அல்லாத பிற பகுதிகளில், இம்மாதம் நேற்று வரை, 74 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய, காய்ச்சல் முகாம்கள் வாயிலாக, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளான அபேட் மருந்து தெளித்தல், புகை அடித்தல், குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளாக, மதுக்கரை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலுார் ஆகிய வட்டாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''தற்போது மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகள், உள்நோயாளிகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களில் அறிகுறி உள்ளவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள், உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகின்றனர்,'' என்றார்.