/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல் பரிசோதனை முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு
/
பல் பரிசோதனை முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு
ADDED : நவ 21, 2025 06:44 AM

கோவை: கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான ராமகிருஷ்ணன் து வக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
பரிசோதனைக்கு பின், வாய் மற்றும் பல் சுத்தம் செய்தல், சொத்தைப் பல் அடைத்தல், பல் அகற்றுதல், செயற்கை பல் கட்டுதல், பல் சீரமைத்தல், பற்களுக்கு புளூரைடு பூசுதல், சீலன்ட் எனும் பேஸ்ட் ஆகிய சிகிச்சை முறைகள் குறித்து தெரிவித்து, குறிப்பிட்ட சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என, பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
உரிய சிகிச்சை தேவைப்படுவோருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டது.

