/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன விலங்குகளால் சேதத்துக்கு துறைசார்ந்த இழப்பீடு தேவை
/
வன விலங்குகளால் சேதத்துக்கு துறைசார்ந்த இழப்பீடு தேவை
வன விலங்குகளால் சேதத்துக்கு துறைசார்ந்த இழப்பீடு தேவை
வன விலங்குகளால் சேதத்துக்கு துறைசார்ந்த இழப்பீடு தேவை
ADDED : அக் 13, 2024 10:30 PM
தொண்டாமுத்தூர் : வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு, பயிர் மற்றும் இதர சேதங்களுக்கு ஏற்ப அந்தத்துறைகளே இழப்பீடு நிர்ணயம் செய்ய வேண்டும், என, விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டம், ஆறுமுககவுண்டனூரில் நடந்தது. சங்க மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், 124 ஆண்டுகள் பழமையான மேட்டுப்பாளையம், கல்லாறு தோட்டக்கலை பழ பண்ணை, நாற்றுப்பண்ணை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
வீட்டு வசதி வாரியத்தின் நிலம் எடுப்பு நடவடிக்கையில், பயன்படுத்தாத நிலங்களை நில உரிமையாளருக்கு திருப்பி தரும் நடவடிக்கையை வரவேற்கிறோம்.
வனவிலங்குகள் பட்டா நிலங்கள் மற்றும் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தும்போது, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித்துறை என, அந்தந்த துறை அதிகாரிகள் வழங்கும் மதிப்பீடு அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.
வினோபா பாவே பூமிதான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, அரசு மானிய வேளாண் இடுபொருள்கள், பயிர்க் கடன்கள் வழங்கப்பட வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.