/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி நிறுவன சொத்து ஏலமிடாமல் 25 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தலைமை நீதிபதிக்கு டெபாசிட்தாரர் கடிதம்
/
நிதி நிறுவன சொத்து ஏலமிடாமல் 25 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தலைமை நீதிபதிக்கு டெபாசிட்தாரர் கடிதம்
நிதி நிறுவன சொத்து ஏலமிடாமல் 25 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தலைமை நீதிபதிக்கு டெபாசிட்தாரர் கடிதம்
நிதி நிறுவன சொத்து ஏலமிடாமல் 25 ஆண்டுகளாக இழுத்தடிப்பு தலைமை நீதிபதிக்கு டெபாசிட்தாரர் கடிதம்
ADDED : ஏப் 26, 2025 12:25 AM
கோவை, ; நிதி நிறுவன மோசடி வழக்கில், கைப்பற்றப்பட்ட சொத்தை ஏலமிட்டு, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு திருப்பித் தராமல், 25 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக, கோவை, விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த திருமாவளவன் என்பவர், டில்லி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, டெபாசிட்தாரர்திருமாவளவன் கூறியதாவது:
கோவையில் செயல்பட்டு வந்த அபிலாஷ் ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், 128 டெபாசிட்தாரர்களிடம், 3.88 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, 2000ல்வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை டான்பிட் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில், மோசடி நிதி நிறுவனத்திடமிருந்து இடைமுடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விட்டு, பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களுக்கு, திருப்பிக் கொடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், ஐகோர்ட்டில் பல்வேறு கட்டங்களில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் நிலுவையில் இருந்து வந்தது.
இதனால் டெபாசிட்தாரர்கள் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தோம். விசாரித்த கோர்ட், அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்று, டெபாசிட்தாரர்களுக்கு வட்டியுடன் திரும்பி கொடுக்க 2023, ஜூலை 3ல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நகல், விசாரணை கோர்ட் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கப்பட்டது. ஆனால், டி.ஆர்.ஓ., அலுவலகம், சொத்துக்களை ஏலத்தில் விட்டு, எங்களுக்கு டெபாசிட் பணத்தை திருப்பித் தருவதற்கான, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர்.
நிதி நிறுவனத்தில் ஏமாந்த பணத்தை பெறுவதற்கு, 25 ஆண்டுக்கும் மேலாக கோர்ட் படியேறி வருகிறோம். டெபாசிட்தாரர்கள் பலர் இறந்து விட்டனர். பலருக்கு வயதாகி விட்டதால் வருமானம் இன்றி, அவர்களது குடும்பத்தினர் கஷ்டத்தில் வாழ்கின்றனர்.
இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு, கடிதம் எழுதி உள்ளோம். மோசடி நிதி நிறுவனத்திடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை விற்று, பணத்தை திருப்பித் தர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும். ஏழை டெபாசிட்தாரர்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு, திருமாவளவன் கூறினார்.

