/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மன உளைச்சலில் இருந்த டிரைவர் தற்கொலை
/
மன உளைச்சலில் இருந்த டிரைவர் தற்கொலை
ADDED : மார் 18, 2025 10:17 PM
கிணத்துக்கடவு ;கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுரம்பை சேர்ந்த டிரைவர், மனஉளைச்சல் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு, பொட்டையாண்டிபுரம்பை சேர்ந்தவர் கருப்புசாமி, 43, டிரைவர். இவருக்கு சில வருடங்களுக்கு முன் குடிப்பழக்கம் இருந்தது. இதை தொடர்ந்து அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவதால், மனைவி கல்பனாவுக்கு, இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா மனமுடைந்து மூன்று வருடங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
தனிமையில் இருந்த கருப்புசாமி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அருகில் வசிப்பவர்கள் கருப்புசாமி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.