/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் ரெடி; 30ல் திறந்து வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி

UPDATED : டிச 27, 2025 07:38 AM
ADDED : டிச 27, 2025 05:14 AM

ஆர்.எஸ்.புரம்: கோவை மாநகராட்சி உருவாக்கியுள்ள ஹாக்கி மைதானத்தை, சர்வதேச ஹாக்கி பெடரேஷன் குழுவினர் நேரில் ஆய்வு செய்து சான்று வழங்கியதை தொடர்ந்து, 30ம் தேதி, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைக்கிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில், 72வது வார்டு ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் கட்டும் பணி துவக்கப்பட்டது. ஆனால், பணி முழுமை அடையாமல் முடங்கி கிடந்தது. பின், தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் ஹாக்கி மைதானம் உருவாக்க ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி பொது நிதியில் ரூ.10 கோடி அளிக்க அரசு அனுமதி வழங்கியது. ஏப். 27ல் உதயநிதி அடிக்கல் நாட்டினார். எட்டு மாதத்தில் பணிகள் முடிந்தன.
சர்வதேச ஹாக்கி பெடரேஷன் குழுவினர் சமீபத்தில் ஆய்வு செய்து, சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு மைதானம் உகந்தது என சான்று வழங்கினர். இதையடுத்து 30ம் தேதி உதயநிதி திறந்து வைத்து, சிறிது நேரம் ஹாக்கி விளையாடுவார். பின், 10,000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குறார். அவரது கார் வரும் வழித்தடத்தில் கான்கிரீட் ரோடு போடப்படுகிறது.
பார்வையாளர்கள் கேலரி, வீரர்கள் உடை மாற்றும் அறை, வாகன நிறுத்தம் போன்ற வசதிகள் ஏற்படுத்த ரூ.15 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் ரூ.7.5 கோடி வழங்க ஹாக்கி அசோசியேஷன் வழங்க முன்வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.