/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவி தற்கொலை; துணை கமிஷனர் விசாரணை
/
மாணவி தற்கொலை; துணை கமிஷனர் விசாரணை
ADDED : ஏப் 18, 2025 06:39 AM
கோவை; பாராமெடிக்கல் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அனுப்பிரியா, 19; கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் முதலாம் ஆண்டு (ரெஸ்பரேடரி தெரபி) படித்து வந்தார். இவர் மருத்துவமனையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, மாணவி வேறொரு மாணவியிடம் இருந்து ரூ.1,500 திருடி விட்டதாக கூறி, பேராசிரியர்கள் விசாரித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. மாணவியின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கை தற்கொலைக்கு துாண்டுதல் வழக்காக மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் தெரிவிக்கையில், ''பீளமேடு, நவ இந்தியாவில் தனியார் கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை கமிஷனர் தலைமையில் விசாரணை நடக்கிறது. மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

