/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு வீட்டுக்கு ரூ.ஒரு லட்சம் சொத்து வரி மாநகராட்சி துணை கமிஷனர் விசாரணை
/
ஓட்டு வீட்டுக்கு ரூ.ஒரு லட்சம் சொத்து வரி மாநகராட்சி துணை கமிஷனர் விசாரணை
ஓட்டு வீட்டுக்கு ரூ.ஒரு லட்சம் சொத்து வரி மாநகராட்சி துணை கமிஷனர் விசாரணை
ஓட்டு வீட்டுக்கு ரூ.ஒரு லட்சம் சொத்து வரி மாநகராட்சி துணை கமிஷனர் விசாரணை
ADDED : ஜன 30, 2025 11:23 PM
கோவை: கோவை மாநகராட்சியில் பணியில் அலட்சியமாக இருந்ததோடு, ஓட்டு வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் சொத்து வரி விதித்தது தொடர்பாக, துணை கமிஷனர் குமரேசன் விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு எட்டாவது வீதியில் ஓட்டு வீட்டில் வசிப்பவர் பழனிசாமி, 76; அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருக்கிறார். வீட்டின் முன்புற பகுதியை 'மெஸ்' நடத்த வாடகைக்கு வீட்டுள்ளார். 'ட்ரோன்' சர்வே எடுத்த மாநகராட்சி அலுவலர்கள், வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி, சொத்து வரி மறுசீராய்வு செய்திருக்கின்றனர்.
இதுநாள் வரை, 2,182 ரூபாய் செலுத்தி வந்துள்ளார். வரி சீராய்வு செய்ததால், இனி, ஆறு மாதத்துக்கு ஒருமுறை, 51 ஆயிரத்து, 322 ரூபாய் சொத்து வரி; குப்பை வரி ரூ.300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து, ஒரு தவணைக்கு மொத்தம், 52 ஆயிரத்து, 732 ரூபாய் செலுத்த வேண்டும். ஓராண்டுக்கு ஒரு லட்சத்து, 5,464 ரூபாய் செலுத்த வேண்டும் என மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதுதொடர்பாக, நமது நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இத்தகவல் அறிந்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், இத்தவறுக்கு காரணமான வரி வசூலரை 'சஸ்பெண்ட்' செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு 'மெமோ' கொடுக்கவும் உத்தரவிட்டார். இப்பிரச்னை தொடர்பாக, மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியிருக்கிறார். இதைத்தொடர்ந்து, வரி சீராய்வு செய்த சமயத்தில் பணியாற்றிய பில் கலெக்டர் யார், உதவி வருவாய் அலுவலர் யார், என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
பணியில் அலட்சியமாக இருந்தது; மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்தது; வரி விதிப்பில் தவறு நடந்திருப்பதாக, மத்திய மண்டல அலுவலகத்தில் வரி விதிப்புதாரர் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.