/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெறிச்சோடி காணப்படும் கொப்பரை களங்கள்
/
வெறிச்சோடி காணப்படும் கொப்பரை களங்கள்
ADDED : அக் 22, 2025 11:01 PM
- நமது நிருபர் -: வெப்ப மண்டல பிரதேசத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம் கொப்பரை உற்பத்திக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
மாவட்டத்தில் கொப்பரை தயாரிக்கும் நுாற்றுக்கணக்கான உலர் களங்கள் செயல்படுகின்றன.
இவற்றில் உள்ளூர் தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்வதில்லை. கொப்பரை உற்பத்தி வெளியூர் தொழிலாளர்களை நம்பியே உள்ளது.
தொழிலாளர்கள் பலர் உலர்களங்களில் குடும்பத்துடன் தங்கி பணிபுரிகின்றனர். தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வர்.
தற்போது தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
ஏற்கனவே தேங்காய் பற்றாக்குறை காரணமாக, குறைந்த அளவிலேயே கொப்பரை உற்பத்தி நடக்கிறது. பருவமழை துவங்கியதால் அது மேலும் குறைந்துள்ளது. தொழிலாளர்கள் ஊருக்கு சென்றுள்ளதால், தற்போது உலர் களங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

