/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்; மாணவர் எண்ணிக்கை முக்கியம்
/
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்; மாணவர் எண்ணிக்கை முக்கியம்
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்; மாணவர் எண்ணிக்கை முக்கியம்
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்; மாணவர் எண்ணிக்கை முக்கியம்
ADDED : ஆக 20, 2025 09:53 PM
கோவை; மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் தகவல் கேட்டுள்ளது.
தமிழ் வழி கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்படுவது போலவே, ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், ஆசிரியர்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அதன்படி, ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம், 15 மாணவர்கள் இருக்க வேண்டும்; மாணவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருந்தால், அந்த மாணவர்களை அருகாமையில் உள்ள ஆங்கில வழிப் பிரிவுகள் கொண்ட, பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பிரிவுகளில், தமிழ் வழி மாணவர்களின் எண்ணிக்கை 150க்கும் குறைவாக இருந்தால், 6 பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
அந்த பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால், ஒரு பணியிடம் கூடுதலாக அனுமதிக்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

