/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறமையை வளர்த்துக் கொண்டால் வளர்ச்சி
/
திறமையை வளர்த்துக் கொண்டால் வளர்ச்சி
ADDED : அக் 04, 2024 11:33 PM

தொழில்துறை வளர்ச்சியில், 'இண்டஸ்ட்ரி 4.0' முக்கிய அங்கம் வகிக்கிறது. தானி-யங்கி நுட்பத்தை நோக்கி உலகம் பயணிக்கிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.,) இன்றியமையாதது.
அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., பயன்பாடு வேகமாக விரிவடைந்துவருவதால், டேட்டா சயின்ஸ், ஏ.ஐ., மெஷின் லேர்னிங் போன்ற படிப்புகள் இன்று அதிகளவில் மாணவர்களால் விரும்பப்படுகிறது. ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய சூழலில் அவற்றை கற்றுக்கொள்வது நல்லது. தொழில்துறையில் மட்டுமின்றி, தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையிலும் ஓர் அங்கமாகி விட்ட நிலையில், அதன் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடி-யாது.
வளமான வாய்ப்புகள்
முன்பு ஒரு திசையில் மட்டுமே பலரும் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், இன்று பல திசைகளில் பல்வேறு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. சுவயம், என்.பி.டி.இ.எல்., யு.டி.எஸ்.ஏ.எச்., உன்னத் பாரத் அபியான், நேரு யுவகேந்த்ரா யூத் கிளப் போன்ற ஏராளமான திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது. அவற்றை முறையாக பயன்படுத்திக்கொண்டால், ஒவ்வொருவரும்கல்வியிலும், வாழ்விலும் சிறந்த வாய்ப்புகளை பெற முடியும்.
சிறந்த முறையில் சிந்திக்கவும், செயல்படவும் செய்ய வைப்பதே சரியான கல்வி. இவற்றில் எந்த ஒன்றும் இல்லை என்றாலும் அது சரியான கல்வி அல்ல. இன்றைய போட்டி நிறைந்த உலகில், தொடர் கற்றல் என்பது மிகவும் அவசியம். திறமை இல்-லாதவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. திறமையை வளர்த்துக்கொள்ளாதவர்-கள் தான், இன்று ஏராளமானோர் உள்ளனர்.
பெரும்பாலான மாணவர்கள், ஒரு கல்-லூரியில் சேர்க்கை பெறுவதற்கு முன்பு என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வி-யையே முன்வைக்கின்றனர். குறிப்பாக, இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகளில் எவ்வாறு படிக்கிறார்கள், எந்தெந்த திறன்களை வளர்த்துக்-கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கான வேலை வாய்ப்பும் சரி, அடுத்த 40 ஆண்டுகால வாழ்வும் சரி அமையும் என்பதை முதலில் அவர்கள் நினை-வில் கொள்ள வேண்டும்.
முன்பு, இன்ஜினியரிங் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளே பிரதானமாக இருந்தன. காலமாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப அவற்றில் இருந்து ஏராளமான பிரிவுகள் உருவாகி வருகின்றன. அதேபோல், கம்ப்-யூட்டர் சயின்ஸ் சமீபகாலங்களாக கொடிகட்டி பறந்துகொண்டிருந்தது. தற்போது அதன் வளர்ச்சி ஏ.ஐ., ஆக உருவெடுத்துள்ளது.