/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள்
/
அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள்
ADDED : ஜூன் 23, 2025 04:30 AM

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சாலை வசதிகள் மேம்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. மரபணு பரிசோதனை மையம், செயற்கை கருத்தரிப்பு மையம் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் சமீபத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பல்நோக்கு பல் மருத்துவ பிரிவு விரைவில் துவக்கும் செயல்பாடுகள் நடந்துவருகின்றன. செவிலியர்கள் விடுதி புதிதாக கட்டுவதற்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலை மேம்பாடு மற்றும் கழிவு நீர் குழாய் சீரமைப்பு பணிக்கு 9.65 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக வளாகம் முழுவதும், கழிவுநீர் செல்லும் குழாய் சீரமைப்பு பணிகள் நடந்துவருகின்றன.
இதுகுறித்து, டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, '' அரசு மருத்துவமனையில் சாலை, கழிவுநீர் மேம்பாட்டு பணிகள் நடந்துவருகின்றன. பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்லும் பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் சாலை அமைக்கும் பணி துவங்கும்,'' என்றார்.