/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் பாதிக்காத வகையில் வளர்ச்சி பணி செய்யணும்!
/
மக்கள் பாதிக்காத வகையில் வளர்ச்சி பணி செய்யணும்!
ADDED : ஏப் 24, 2025 10:27 PM
வால்பாறை,; வியாபாரிகள் பாதிக்கும் வகையில் வளர்ச்சிப்பணிளை செய்யக்கூடாது, என, எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
வால்பாறை எம்.எல்.ஏ., அமுல்கந்தசாமி அறிக்கை வருமாறு:
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் வணிகவளாகம் கட்டுவதால், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். அதே போல், சுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக உள்ள அண்ணாதிடலில், 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதியுடன் ஸ்டேடியம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, இரண்டு திட்டங்களையும் கைவிட வேண்டும். சுற்றுலா பயணியர் நலன் கருதி படகு சவாரி, பூங்காவை அழகுபடுத்த வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் திட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
சக்தி - தலநார், வாகமலை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் பழுதடைந்துள்ள ரோடுகளை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

