/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் விரைவில் வளர்ச்சி பணிகள்
/
ரயில்வே ஸ்டேஷனில் விரைவில் வளர்ச்சி பணிகள்
ADDED : டிச 11, 2025 05:05 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், வளர்ச்சிப் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளது.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு, பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு அவர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்புகளை மேம்படுத்த, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் நீட்டிப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள மண் ரோட்டை தார் ரோடாக மாற்றம் செய்ய வேண்டும் என, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு மனு அனுப்பினார்.
இதற்கு பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
அதில், 'ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 1 மற்றும் 2வது பிளாட்பாரம் நீட்டிக்கும் திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டு தற்போது செயல்முறையில் உள்ளது. மேலும், ரயில்வே ஸ்டேஷன் பின்பகுதியில் உள்ள ரோடு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் நிறைவு பெற்றால், கிணத்துக்கடவுக்கு அருகே உள்ள கொண்டம்பட்டி, அரசம்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் பலர் வந்து செல்ல சிரமம் இருக்காது. இதனால் ரயில் பயணியர் நிம்மதி அடைந்துள்ளனர்.

