ADDED : ஜூன் 20, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : மாநகராட்சி தெற்கு மண்டலத்தில், ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் தார் ரோடு, கான்கிரீட் ரோடு உள்ளிட்ட பணிகள் துவங்கப்பட்டன.
மாநகராட்சி தெற்கு மண்டலம், 96வது வார்டுக்கு உட்பட்ட மதுக்கரை ரோடு, பழனியப்பா லே-அவுட், குருசாமி பிள்ளை வீதி, பெரியசாமி சேர்வை வீதிகளில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக தார் ரோடு, கான்கிரீட் ரோடு அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையம் மேம்பாட்டு பணிகள் நேற்று துவங்கப்பட்டன.
இங்கு, மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைத்தல் பணிகளையும், மேயர் ரங்கநாயகி ஆய்வு செய்தார். சுந்தராபுரம் நகர்ப்புற சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரை இருப்பு குறித்தும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.