ADDED : பிப் 28, 2026 07:31 AM

அ நிறம் | அளவு
கோவை: வடகோவை ரயில்வே ஸ்டேஷன் பணிகளை விரைந்து முடிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை சந்திப்பில், தற்போது 6 நடைமேடைகள் உள்ளன. தினமும் 37 ரயில்கள், அங்கிருந்து புறப்படும் நிலையில், மொத்தம் 139 ரயில்கள் நாள்தோறும் கையாளப்படுகின்றன.
ஆண்டுக்கு ஒரு கோடி பேர், இந்த சந்திப்பை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு நிலவும் இடநெருக்கடி காரணமாக, போத்தனுார் மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டு அவற்றின் வழியாக ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.
இதன்படி அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன், வடகோவை ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
