/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ 1.82 கோடியில் வளர்ச்சி பணிகள்
/
ரூ 1.82 கோடியில் வளர்ச்சி பணிகள்
ADDED : மே 14, 2025 11:45 PM
அன்னுார்; அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய்க்கான பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில், வடக்கலூர், காட்டம்பட்டி, கணுவக்கரை, மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இங்கு கான்கிரீட் ரோடு, கழிவுநீர் வடிகால், தார் சாலை, கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு, ஒரு கோடியே 93 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆன்லைன் வாயிலாக டெண்டர்கள் பெறப்பட்டன. இதில் கடந்த வாரம் டெண்டர் திறப்பின் போது, முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமியின் டெண்டர், அனுபவச் சான்று இல்லை என்று கூறி அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. காட்டம்பட்டியில், 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணிக்கு உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இது தவிர, ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய்க்கான பணிகளுக்கு டெண்டர் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து நான்கு ஊராட்சிகளிலும் விரைவில் வளர்ச்சி பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.