/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழி மாத பஜனையில் பக்தர்கள் பரவசம்
/
மார்கழி மாத பஜனையில் பக்தர்கள் பரவசம்
ADDED : ஜன 02, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; மார்கழி மாதத்தை முன்னிட்டு, கோவில்களில், அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
பழமையான அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி 1 ம் தேதி முதல் தினமும் காலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை, கரிவரதராஜ பெருமாள் திருப்பாவை பஜனை குழு சார்பில், பஜனை நடைபெற்று வருகிறது. நேற்று திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. இதையடுத்து பஜனை பாடல்கள் இசையோடு பாடப்பட்டன.
பஜனை நிகழ்ச்சி மார்கழி மாத இறுதி வரை நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் பக்தர்கள் ஜெயப்பிரகாஷ், முத்துச்சாமி, சாமிநாதன், தேவராஜ் உள்ளிட்டோர் பக்தி பாடல்கள் பாடி, பக்தர்களை பரவசப்படுத்தினர்.