/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவ விழா இடையர்பாளையத்தில் திரண்ட பக்தர்கள்
/
ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவ விழா இடையர்பாளையத்தில் திரண்ட பக்தர்கள்
ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவ விழா இடையர்பாளையத்தில் திரண்ட பக்தர்கள்
ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவ விழா இடையர்பாளையத்தில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஆக 02, 2025 09:28 AM

கோவை:
ஆஸ்திக ஸமாஜத்தின் 26வது ஆண்டு, நாம சங்கீர்த்தன வைபவத்தில், ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவ விழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
ஆஸ்திக ஸமாஜத்தின் சார்பில், 26ம் ஆண்டு நாம சங்கீர்த்தன வைபவ நிகழ்ச்சி, தடாகம் சாலை இடையர்பாளையம் வி.ஆர்.ஜி.திருமண மஹாலில் நடந்து வருகிறது.
நேற்று காலை 9:00 மணிக்கு, குருஜீ ராகவன், கோவை திருப்புகழ் அன்பர்கள் மற்றும் வைத்தியநாதன் தலைமையில், ஸ்ரீ வள்ளி கல்யாண மஹோத்ஸவம் நடந்தது.
இதில் தாமரை மாலைகள் மஞ்சள், சிகப்பு வெண் பட்டு வஸ்திரங்கள் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார்.
வேத கோஷங்கள் முழங்க, மங்கள இசை ஒலிக்க ஸ்ரீ வள்ளி, தேவசேனா தேவிகளுக்கு மாங்கல்யதாரணம் நிறைவேற்றப்பட்டது.
மதியம் 2:45க்கு ஸ்வாகதம் கிருஷ்ணா சத்சங்க குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு தோடயமங்களம், குருதியானங்கள், கீதகோவிந்தம், தரங்கம், ராமதாஸாதி கீர்த்தனைகள் சிறப்பு பூஜைகளும், டோலோத்ஸவமும் நடந்தன.
இதில், மோஹனுார் ஸ்ரீகாந்த் கவுன்டின்ய பாகவதர், கோவிந்தபுரம் ஸ்ரீஞானேஸ்வர் ராமகிருஷ்ண பாகவதர் குழுவினர் இடம் பெற்றிருந்தனர். இன்று காலை 7:00 மணி முதல், ஸ்ரீஸ்ரீ பரமாச்சார்யாள் விஷ்ணு ஸஹஸ்ர நாம மண்டலியின் விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தோடயமங்களம், குருகீர்த்தனைகள், ஏழாவது அஷ்டபதி முதல் தரங்கம் பூஜை, கணேசாதி தியானங்கள், பூஜை திவ்யநாமம், டேலோத்ஸவம் ஆகியவை நடைபெறுகிறது. நாளையும் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.