/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் ஆஞ்சநேயரை வழிபட திரண்ட பக்தர்கள்
/
ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் ஆஞ்சநேயரை வழிபட திரண்ட பக்தர்கள்
ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் ஆஞ்சநேயரை வழிபட திரண்ட பக்தர்கள்
ஹனுமன் ஜெயந்தி விழா கோலாகலம் ஆஞ்சநேயரை வழிபட திரண்ட பக்தர்கள்
ADDED : டிச 31, 2024 04:36 AM

கோவை, : ஹனுமன்ஜெயந்தியான நேற்று தங்கக்கவசம், முத்தங்கி, சந்தனகாப்பு, ராஜ அலங்காரம் என்று பல வித்தியாசமான அலங்காரங்களில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பீளமேடு நவஇந்தியாவிலுள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு வேள்வி, மஹாபூர்ணஹுதி, நடந்தது.
சுவாமிக்கு கையில் செங்கோல் மற்றொரு கையில் குறுவாள், கால்களில் மன்னருக்கான சிறப்பு பாதுகைகள் அணிவிக்கப்பட்டு முகத்தில் ஒரு சிறு பகுதி மட்டும் செந்துாரத்தால் அணிவித்து, மற்ற பகுதி ராஜாவை போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கவுண்டம்பாளையம் சபரிகார்டன் சரவணா நகரிலுள்ள ரங்கநாதர் வீரமாட்சியம்மன் கோவிலில், முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீ மஹாவீர ஆஞ்சநேயர் காட்சியளித்தார்.
பொள்ளாச்சி சாலை எல்.ஐ. சி., காலனி ஸ்ரீ சப்தகிரி வெங்கடேஸ்வரர் கோவிலில் தங்க கவசத்திலும், திருச்சி சாலை சுங்கம் கணேசபுரம் சித்தி விநாயகர் கோவிலிலுள்ள குபேர ஆஞ்சநேயர் சந்தனகாப்பு அலங்காரத்திலும், வடவள்ளி ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் முத்தங்கி அலங்காரத்திலும் அருள்பாலித்தார்.
இதே போல், கோவையிலுள்ள பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.திரளான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தனர். பக்தர்கள் வடைமாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபட்டனர். பக்தர்கள் பலரும் சர்க்கரை, வெண் பொங்கல், புளியோதரை, வடை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கினர்.