ADDED : டிச 11, 2025 05:08 AM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத சஷ்டி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன் பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பக்தி பாடல்களை பாடி முருகனை மகிழ்வித்தனர். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல் முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.
