/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுாரில் இருந்து அயோத்தி புறப்பட்டு சென்ற பக்தர்கள்
/
அன்னுாரில் இருந்து அயோத்தி புறப்பட்டு சென்ற பக்தர்கள்
அன்னுாரில் இருந்து அயோத்தி புறப்பட்டு சென்ற பக்தர்கள்
அன்னுாரில் இருந்து அயோத்தி புறப்பட்டு சென்ற பக்தர்கள்
ADDED : பிப் 22, 2024 11:27 PM

அன்னுார், பிப். 23--
அன்னுார் வட்டாரத்திலிருந்து, 120 பேர் அயோத்தி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு, நாடு முழுவதிலிருந்தும் சிறப்பு ரயில்கள் வாயிலாக பக்தர்கள் சென்று வருகின்றனர். அன்னுார் வட்டாரத்திலிருந்து, பா.ஜ., ஆன்மிக மேம்பாட்டு அணி சார்பில், மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தலைமையில், நேற்று முன்தினம் இரவு, 120 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். வழியனுப்பும் நிகழ்ச்சி, கரியாம்பாளையம், சக்தி மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அணியின் மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி பேசுகையில், ''500 ஆண்டு காலம் இந்துக்களின் கனவாக இருந்த கோவில், பிரதமர் மோடியின் முயற்சியால் தற்போது கைகூடியுள்ளது. அங்கு சென்று வழிபடுவது மிகவும் பெருமைக்குரிய விஷயம்,'' என்றார்.
இதையடுத்து, பக்தர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர். இதே போல், சூலுார் வட்டாரத்தில் இருந்தும், நேற்று முன்தினம் இரவு அயோத்தி கோவிலுக்கு சிறப்பு ரயிலில் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.