நரசிம்மர் ஜெயந்தி விழா பக்தர்கள் சிறப்பு வழிபாடு
நரசிம்மர் ஜெயந்தி விழா பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED : மே 01, 2026 05:15 AM

கோவை: நரசிம்மர் ஜெயந்தியை ஓட்டி, பெருமாள் கோயில்களில் பக்தர்கள் நேற்று வழிபாடு மேற்கொண்டனர்.
விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மர், இரணியகசிபுவை அழித்து பிரகலாதனை காப்பாற்றினார். அதற்காக வைசாக சுக்ல சதுர்த்தசியன்று அவதரித்தார். அந்நாளை நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.
நரசிம்மர்ஜெயந்தியை ஒட்டி உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நரசிம்மருக்கு நெய்தீபம் ஏற்றியும் பாணக்கம் படைத்தும் வழிபட்டனர்.
பெரியகடைவீதி லட்சுமிநாராயணவேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி , இடையர்வீதி கல்யாணவெங்கட்ரமணசுவாமி, பி.என்.புதுார் கோதண்டராமர், ராம்நகர் கோதண்டராமஸ்வாமி, சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், ராமநாதபுரம் நரசிங்கபெருமாள், சிங்காநல்லுார் உலகளந்தபெருமாள், சென்னனுார் ராதாகிருஷ்ணர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும் அபிஷேகமும் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.
