/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்க்கிங்' வசதி அதிகரிக்க பக்தர்கள் வேண்டுகோள்
/
'பார்க்கிங்' வசதி அதிகரிக்க பக்தர்கள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 22, 2025 10:10 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலுக்கு, நாளுக்குநாள் பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது. மற்ற நாட்களை விட, செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் உள்ளது.
பக்தர்களில் பெரும்பாலானோர் பைக்கில் வந்து செல்கின்றனர். விஷேச காலங்களில் மலை அடிவாரத்தில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத படி ஒன்றுக்கு பின் ஒன்றாக, வாகனங்கள் பார்க்கிங் செய்கின்றனர்.
கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து மலையிறங்கி வரும் பக்தர்கள், தங்கள் வாகனத்தை வெளியில் எடுக்க சிரமப்படுகின்றனர். இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, மக்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பிலோ அல்லது ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பிலோ, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய போதுமான இட வசதியை ஏற்படுத்த வேண்டும், என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

