/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதி யோகி ரதத்துக்கு பக்தர்கள் வரவேற்பு
/
ஆதி யோகி ரதத்துக்கு பக்தர்கள் வரவேற்பு
ADDED : மார் 03, 2024 08:53 PM

கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டி மற்றும் நீலம்பூரில் ஆதியோகி ரதத்துக்கு, பக்தர்கள் வரவேற்பு அளித்து வழிபாடுகள் நடத்தினர்.
வரும், 8 ம்தேதி மகா சிவராத்திரி விழா நடக்கிறது. கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதங்கள் கோவை நோக்கி வந்து கொண்டுள்ளன. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சோமனூருக்கு வந்த ஆதி யோகி ரதத்துக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
கே.ராயர்பாளையம், மோளகாளி பாளையம் பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கருமத்தம்பட்டியில் இருந்து மோளகாளிபாளையம் அழைத்து சென்றனர். அங்குள்ள கோவிலில் ஆதியோகிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் ரதத்தை சுற்றி பக்தி பாடல்கள் பாடி ஆடினர். பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், நீலம்பூருக்கு வந்த ஆதியோகி ரதத்துக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

