/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மருதமலைக்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பை பயன்படுத்தாதீங்க'
/
'மருதமலைக்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பை பயன்படுத்தாதீங்க'
'மருதமலைக்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பை பயன்படுத்தாதீங்க'
'மருதமலைக்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பை பயன்படுத்தாதீங்க'
ADDED : பிப் 10, 2025 06:39 AM
கோவை : தைப்பூசத்திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை தைப்பூசத்திருவிழா, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சூழ வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள்பங்கேற்பர்.
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருவதால், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தயங்க மாட்டார்கள்.
அதனால் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
இதனால் பக்தர்களுக்கும் பொதுநல அமைப்புகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். என்று ஆணிவேர் அமைப்பு நிறுவனர் சாந்தகுமார் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.