ADDED : ஏப் 15, 2026 04:43 AM

அ நிறம் | அளவு
கோவை: சென்னனுார் ஸ்ரீ ராதாகிருஷ்ணர் கோயில் புனருத்தாரண அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக் ஷண விழா, மஹாசுதர்ஸன ஹோமத்துடன் நடந்தது.
சம்ப்ரோக் ஷண விழாவை தலைமை ஏற்று நடத்தி வைத்த ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ சடகோப ஜீயர் ஸ்வாமிகள் பேசியதாவது:
பெருமாளும் தாயாரும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கின்றனர். ஆனால் வெவ்வேறு திருநாமங்களில் நமக்கு அருள் வழங்குகின்றனர்.
திருப்பாவையில் பக்தி, அறிவியல், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், தொழில்நுட்பம் என்று அனைத்தும் பொதிந்துள்ளது. திருப்பாவையை அனைவரும் பாராயணம் செய்யலாம். பக்திநெறி இருந்தால் போதும். அதன் வாயிலாக இறைவனை எளிதாக சரணாகதியடையலாம். இவ்வாறு அவர் பேசினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
