/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு, தனியார் பள்ளிகளில் குடற்புழு நீக்க முகாம்
/
அரசு, தனியார் பள்ளிகளில் குடற்புழு நீக்க முகாம்
ADDED : ஆக 13, 2025 08:45 PM
பெ.நா.பாளையம்; தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு இருமுறை மாநிலம் தழுவிய குடற்புழு நீக்கும் திட்டம் கடந்த, 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் சுற்று குடற்புழு நீக்க முகாம் ஆக., 11ல் கோவை மாவட்டத்தில் உள்ள, 1697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 150 கல்லூரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் வாயிலாக 'அல்பெண்டாசோல்' எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.
விடுபட்டவர்களுக்கு ஆக.,18ம் தேதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடற்புழு நீக்க மாத்திரையை உணவு உட்கொண்ட பின், நன்றாக சப்பி, மென்று விழுங்க வேண்டும். பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே விழுங்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

