/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடற்புழு நீக்க மாத்திரை; 15 ஆயிரம் பேருக்கு வழங்கல்
/
குடற்புழு நீக்க மாத்திரை; 15 ஆயிரம் பேருக்கு வழங்கல்
குடற்புழு நீக்க மாத்திரை; 15 ஆயிரம் பேருக்கு வழங்கல்
குடற்புழு நீக்க மாத்திரை; 15 ஆயிரம் பேருக்கு வழங்கல்
ADDED : பிப் 11, 2025 11:54 PM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒன்று முதல், 19 வயது உட்பட்ட சிறுவர்கள், 20 முதல், 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உள்ளிட்டோருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. ஒரு வாரம் நடைபெறும் இத்திட்டத்தில் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜம்புகண்டி, தாளியூர், எண்.4 வீரபாண்டி, எண்.24 வீரபாண்டி, மத்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாயிலாக பத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், 15 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. ஒரு வாரம் இந்த மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 17ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி அதில் வழங்கப்படும்.
இந்த மாத்திரை உண்பதால் ரத்த சோகை குறைந்து, ஊட்டச்சத்து அதிகரிக்கும், மன ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, கற்றல் திறன் மேம்பாடு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் குடற்புழு நீக்க மாத்திரை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

