sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குடற்புழு ஒழிப்பு வாரம்: பள்ளியில் விழிப்புணர்வு

/

 குடற்புழு ஒழிப்பு வாரம்: பள்ளியில் விழிப்புணர்வு

 குடற்புழு ஒழிப்பு வாரம்: பள்ளியில் விழிப்புணர்வு

 குடற்புழு ஒழிப்பு வாரம்: பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : பிப் 13, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், குடற்புழு ஒழிப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தேசிய குடற்புழு ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டு தோறும், பிப்ரவரி 10ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதி என, இரு முறை கடைபிடிக்கப்படுகிறது.

தேசிய குடற்புழு ஒழிப்பு வாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை டாக்டர் கீர்த்தனா, செவிலியர் தனலட்சுமி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில், குடற்புழுவால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் தன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் உடல் சுகாதாரம் மற்றும் தற்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குடற்புழுக்களால், வயிற்று வலி, வீக்கம், குமட்டல், வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். புழுக்கள் குடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதால், உடல் மெலிந்து, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும், என, தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us