ADDED : மார் 13, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
கோவை:பயணிகள் வசதிக்காக தன்பாத்-போத்தனுார் ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து நாளை மதியம் 2:00க்கு புறப்படும் ரயில்(03375) ராஞ்சி, ஹாட்டியா, சாம்பல்பூர், விஜயவாடா, நெல்லுார், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக 16ம் தேதி காலை 11:20க்கு போத்தனுார் வந்தடைகிறது.
எட்டு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் 11 உட்பட 22 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
