ADDED : செப் 24, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : வரும் 25 மற்றும் அக்., 2ம் தேதிகளில், தன்பாத்தில் இருந்து, கோவைக்கு புறப்படவிருந்த சிறப்பு ரயில் (எண்:03325) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கோவையில் இருந்து தன்பாத்துக்கு வரும் 28 மற்றும் அக்., 5ம் தேதி தன்பாத்துக்கு இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில் (எண்: 03326) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.