/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மசாஸ்தா கோவில் ஆறாட்டு விழா துவக்கம்
/
தர்மசாஸ்தா கோவில் ஆறாட்டு விழா துவக்கம்
ADDED : ஏப் 29, 2025 06:17 AM
போத்தனூர்:
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 விரிவு பகுதியில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இதன், 29ம் ஆண்டு ஆறாட்டு நேற்று முன்தினம் மாலை தீபாராதனை, வாஸ்து ஹோமம், வாஸ்து பலி ஆகியவற்றுடன் துவங்கியது.
நேற்று அதிகாலை முதல் நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை, கலச பூஜை, கலசாபிஷேகம், உச்சி கால பூஜை, அலங்கார தரிசனம். மாலை கொடியேற்றம், முளையிடல் உள்ளிட்டவை நடந்தன.
இன்றும் அதிகாலை முதல் நிர்மால்ய தரிசனம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை, மஹா பிரத்யங்கர யாகம், மாலை வள்ளி கும்மியாட்டம், இரவு அத்தாழ பூஜை, தீபாராதனை, ஹரிவராசனம், பிரசாத வினியோகம் உளிட்டவை நடக்கின்றன.
நாளை அதிகாலை நிர்மால்ய தரிசனம், கணபதி, முருகன் சிறப்பு கலசாபிஷேக பூஜைகள், உச்சி கால பூஜை, நாகர் சிறப்பு பூஜை உள்ளிட்டவை நடக்கின்றன.

