/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் தர்ணா
/
குத்தகை விவசாயிகள் சங்கம் சார்பில் தர்ணா
ADDED : ஏப் 17, 2025 10:42 PM

பொள்ளாச்சி ;பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் ஸ்டாலின் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், பல தலைமுறைகளாக கோவில் இடங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அறநிலையத்துறை சட்டப்பிரிவு, 34ன்படி நியாயமான விலை நிர்ணயித்து கிரய பட்டா வழங்க வேண்டும்.
சாகுபடி செய்யும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து, மறு ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட்டு பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை பதிவு செய்து கொடுக்க வேண்டும்.
2019ல் வெளியிட்ட அரசாணை, 318யை செயல்படுத்த சட்டசபையில் அறிவித்தபடி சீராய்வு மனுவை மாநில அரசு உடன் தாக்கல் செய்ய வேண்டும்.கோவில் பெயரில் எவ்வித ஆவணங்களும் இல்லாத இனாம் நிலங்கள், பலவகை புறம்போக்கு இடங்களை தவறுதலாக பெயர் மாற்றம் செய்துள்ள சொத்துக்களின் மீது அறநிலையத்துறை உரிமை கோருவதை கைவிட வேண்டும்.
பயனாளிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி மின் இணைப்பு மற்றும் வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும். வக்ப் போர்டு இடங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.