/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
/
இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ADDED : பிப் 23, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மண்டல அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் கூட்டுப்போராட்டக்குழு சார்பில், கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஊதிய உயர்வு, குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதமாக உயர்வு, ஓய்வூதிய திட்டத்தில் நிறுவன பங்களிப்பு 14 சதவீதமாக உயர்வு, புதிய பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.