/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்ப காலத்தில் சர்க்கரை, தைராய்டு இருந்தால் அலட்சியம் கூடாது
/
கர்ப்ப காலத்தில் சர்க்கரை, தைராய்டு இருந்தால் அலட்சியம் கூடாது
கர்ப்ப காலத்தில் சர்க்கரை, தைராய்டு இருந்தால் அலட்சியம் கூடாது
கர்ப்ப காலத்தில் சர்க்கரை, தைராய்டு இருந்தால் அலட்சியம் கூடாது
ADDED : அக் 12, 2025 11:37 PM
கோவை:கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை, தைராய்டு பாதிப்புகளை அலட்சியப்படுத்தக்கூடாது என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாநில சுகாதாரத்துறையின் கீழ், தாய் சேய் கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, கர்ப்பிணி தாய்மார்களின் அனைத்து செயல்பாடுகளும் பிக்மி., பதிவுகள் வழியாக கண்காணிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு 180 நாட்கள் முன்னரும், 180 நாட்கள் பின்னரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், செவிலியர்கள் குழு சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மொபைல் வாயிலாக கர்ப்பிணிகளின் உடல் நலம் குறித்து விசாரிக்கின்றனர். கடந்த காலங்களை காட்டிலும், அதிக அளவில் மகப்பேறு சர்க்கரை, தைராய்டு கோளாறுகளால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதாக, களப்பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாய் சேய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், கர்ப்பிணிகளுக்கு 8 முதல் 12 வாரத்திற்குள் ஒரு முறை, 20-24 வாரத்தில், 30-32 ல் ஒரு முறை என மூன்று முறை ஜி.சி.டி., எனும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், சர்க்கரை, தைராய்டு பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் ஹை ரிஸ்க் பட்டியலில் வைக்கப்படுகின்றனர்.
டாக்டர் நிர்மலா கூறுகையில், ''வாழ்வியல் மாற்றங்கள், உடல் பருமன், சுற்றுப்புற சூழல் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை, தைராய்டு பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. சர்க்கரை, தைராய்டு இருப்பின், கட்டாயம் டாக்டர்கள் அறிவுறுத்தல் படி மருந்து, உணவு முறையை பின்பற்ற வேண்டும். அலட்சியமாக விட்டால், பிரசவ நேரத்தில் சிக்கலும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இப்பிரச்னைகள் இருப்பின் அலட்சியம் கூடாது,'' என்றார்.