/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கட்டாயமாக்கினால் சிறப்பு
/
பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கட்டாயமாக்கினால் சிறப்பு
பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கட்டாயமாக்கினால் சிறப்பு
பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு கட்டாயமாக்கினால் சிறப்பு
ADDED : அக் 12, 2025 11:38 PM
கோவை:கோவையில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் இடையே, மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், கிணத்துக்கடவு, கந்தே கவுண்டன் சாவடி, சூலூர், கல்வீரம்பாளையம், குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகத்திற்கு எதிராக, பெற்றோர் தரப்பில் இருந்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இது, மாணவர்- -- ஆசிரியர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் உறவில், ஒருவித விரோதபோக்கை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
சில தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'ஆசிரியர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்னைகளுக்காக, முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரைத் தூண்டிவிட்டு, குறிப்பிட்ட ஆசிரியர்கள் அல்லது தலைமையாசிரியர்கள் மீது புகார் அளிக்க வைக்கின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் கூறுவதை முழுமையாக விசாரிக்காமல், புகார் அளிப்பதும் இந்த பிரச்னை நீடிக்க ஒரு காரணம்' என்றனர்.
இந்நிலையில், 'பள்ளிகள் வெறும் கற்றல் இடமாக மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான சமூகச் சூழலை உருவாக்கும் மையங்களாகவும் விளங்க வேண்டும். இதை உறுதி செய்ய, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளை கட்டாயமாக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்த, தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி நிர்வாகம், ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டங்களை தவறாமல் நடத்த வேண்டும்' என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.