/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்மல் கார்டன் பள்ளியில் வைர விழா கொண்டாட்டம்
/
கார்மல் கார்டன் பள்ளியில் வைர விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 07, 2025 11:52 PM
கோவை; திருச்சி ரோடு, சுங்கம் அருகே கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வைர விழா வரும், 10, 11ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து, பள்ளி தாளாளர் ஆரோக்கிய ததேயூஸ், முன்னாள் மாணவர் சங்க தலைவர் நந்தகுமார், முன்னாள் ஆசிரியர் ஜோ தன்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
கார்மல் கார்டன் பள்ளி, 1964ம் ஆண்டு, 50 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. மாநகரில் ஆண்களுக்கான முதல் பள்ளி என்ற பெருமையுடைய இப்பள்ளி, தற்போது வைர விழா ஆண்டுக்குள் நுழைந்துள்ளது.
தொழிலதிபர்கள், டாக்டர்கள் என, பலர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாக உள்ளனர். வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கானோர் நல்ல நிலையில் உள்ளனர். இவர்கள் பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து வருகின்றனர்.
தற்போது, 2,200 மாணவர்கள் பயிலும் நிலையில் வரும், 10, 11ம் தேதிகளில் வைர விழா கொண்டாடப்படுகிறது. கோவை பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில் நடக்கும் விழாவில், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.
1976ம் ஆண்டு முதல் தற்போது வரை பயின்று, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள், 12 பேருக்கு, 'ஜூவல் ஆப் கார்மல்' விருது வழங்கப்படுகிறது. இரண்டாம் நாள் கல்வி அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முன்னாள் ஆசிரியர்கள் மைக்கேல் சாமி, சதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

