/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒன்றியங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பற்றாக்குறை : ஆன்-லைனில் தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல்
/
ஒன்றியங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பற்றாக்குறை : ஆன்-லைனில் தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல்
ஒன்றியங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பற்றாக்குறை : ஆன்-லைனில் தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல்
ஒன்றியங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பற்றாக்குறை : ஆன்-லைனில் தகவல்களை பதிவு செய்வதில் சிக்கல்
ADDED : செப் 25, 2011 10:08 PM
பொள்ளாச்சி : உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விபரங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய ஒன்றிய, பேரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஒன்றியங்களில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் அதிகாரிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக, ஒன்றியங்களிலுள்ள அனைத்து அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பேரூராட்சி அலுவலகங்களிலும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், அனைத்து துறைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலின் அனைத்து விபரங்களும் ஆன்-லைனில் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், புதிதாக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஏற்கனவே ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் எந்தப்பகுதிகளை தெரிந்து கொள்ள வசதியாக ஆன்-லைனில் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தனித்தனியாக 'பாஸ் வேர்ட்' தரப்பட்டுள்ளது. இதனால், ஒன்றியங்களில் பதிவு செய்யப்படும் தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும். ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒன்றியங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால், ஏற்கனவே அதிகாரிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் பற்றாக்குறையால் ஆன்-லைனில் விபரங்களை பதிவு செய்வதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒன்றியங்களுக்கு, ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளதால், ஒரு ஆபரேட்டர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பெரும்பாலான ஒன்றியங்களில் புதிதாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், விபரங்களை பதிவு செய்ய ஒன்றிய அலுவலர்கள் பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், மற்ற அலுவலக பணிகள் பாதிக்கப்படுகின்றன.ஒன்றிய அதிகாரிகள்
கூறியதாவது: கடந்த உள்ளாட்சி தேர்தல் வரை அனைத்து விபரங்களும், பேக்ஸ், போன் மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வந்தது. இதனால், தகவல்களை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அதன்பின், ஒன்றியங்களில், வளர்ச்சி பணிகள் குறித்த விபரங்களை பதிவு செய்ய ஆன்-லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும், ஆன்-லைன் வசதி உள்ளதால், தேர்தலுக்கு மனுதாக்கல் செய்பவர், அதன் விபரங்கள், வாக்காளர் பட்டியல் உட்பட அனைத்து தகவல்களையும் ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விபரங்களை பதிவு செய்ய போதிய ஆபரேட்டர்கள் இல்லை. அதிக ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்கள் இருப்பதால், அனைத்து விபரங்களையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தேர்தல் குறித்து தெரிவிக்கும் நடைமுறைகள் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதால், கம்ப்யூட்டரில் பதிவு செய்ய ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. இதனால், மற்ற பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.
ஒன்றியங்களில், ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் கூடுதலாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் ஆகியோரை கூடுதலாக நியமிக்க வேண்டும். அரசு இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.