/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டைஸ் தடகளப்போட்டிகள் சீறிப்பாய்ந்த மாணவர்கள்
/
டைஸ் தடகளப்போட்டிகள் சீறிப்பாய்ந்த மாணவர்கள்
ADDED : மார் 08, 2024 01:16 AM

கோவை;மாவட்ட அளவிலான 'கோவை டைஸ்' தடகளப்போட்டியில் மாணவர்கள் சீறிப்பாய்ந்துபதக்கங்கள் வென்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கு 'கோவை டைஸ்' என்ற பெயரில் ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான தடகளப் போட்டிகள் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தன.
போட்டியை,கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். இதில், மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
மாணவியர் பிரிவு 1,500மீ., ஓட்டத்தில் கே.பி.ஆர்., கல்லுாரி மதுமிதா முதலிடம், அரசு தொழில்நுட்ப கல்லுாரி லீலாவதி இரண்டாமிடம், கே.பி.ஆர்., மாணவி பெர்ஸியா மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவர் பிரிவு 5,000மீ., ஓட்டத்தில் அரசு தொழில்நுட்ப கல்லுாரி நிதின் லீயோ முதலிடம், குமரகுரு கல்லுாரி ஆதித்யா இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி வருண் மூன்றாமிடம்; 800மீ., ஓட்டத்தில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி நந்தகிரண் முதலிடம், இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி கிருஷ்ணா இரண்டாமிடம், கே.பி.ஆர்., கல்லுாரி மணீஷ் மூன்றாமிடம் பிடித்தனர்.

