செம்மறி ஆடுகளை கொன்றது சிறுத்தையா; நடக்கிறது ஆய்வு
செம்மறி ஆடுகளை கொன்றது சிறுத்தையா; நடக்கிறது ஆய்வு
ADDED : பிப் 21, 2026 05:18 AM
தொண்டாமுத்தூர்: தீத்திபாளையத்தில், மர்ம விலங்கு கடித்து, 3 செம்மறி ஆடுகள் உயிரிழந்த விவகாரத்தில், சம்பவ இடத்தில் கேமரா பொருத்தி கண்காணிக்க உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
தீத்திபாளையம், ஹைடெக் சிட்டி அருகே சத்யநாராயணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, திண்டுக்கல்லை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தங்கி தோட்டத்தை பராமரித்து வருகிறார். 6 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.
கடந்த 18ம் தேதி, காலை செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். மாலை, 5:00 மணிக்கு, 3 ஆடுகள் மட்டுமே உயிருடன் இருந்தன. மற்ற 3 ஆடுகளையும், மர்ம விலங்கு கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கடித்து கொன்றிருந்தது.
வனத்துறையினர் உடற்கூறாய்வு செய்தனர். உடல் உறுப்புகளை சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
சம்பவ இடத்தில், கேமரா பொருத்தி கண்காணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
