/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகழியில் ஆண் யானை உடல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததா?
/
அகழியில் ஆண் யானை உடல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததா?
அகழியில் ஆண் யானை உடல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததா?
அகழியில் ஆண் யானை உடல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததா?
ADDED : அக் 30, 2025 01:00 AM

மேட்டுப்பாளையம்: வனப்பகுதியில் உள்ள அகழியில் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்து குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஓடந்துறை காப்பு காட்டுக்கு அருகில், தனியர் நிலத்தை ஒட்டியவாறு யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அகழி உள்ளது. வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து சென்ற போது, நேற்று முன் தினம் நள்ளிரவு 11.30 மணி அள வில், இந்த அகழியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கால்கள் மடிந்து மண்ணுக்குள் சிக்கியவாறு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் கால்நடை துறையிலிருந்து மருத்துவர்கள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தது. பின் யானையின் உடல் மீட்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இதனிடையே யானை அகழியில் இறந்த நிலையில் இருந்தபோது, யானையின் உடல் மீது அகழிக்கு அருகில் உள்ள சோலார் மின்வேலி கம்பிகள் இருந்தன. மேலும் யானை இறந்து சுமார் ஒரு வார காலத்துக்கு மேல் ஆகி இருந்தது.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் வனத்துறையினர், யானை மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது அகழியை தாண்டும் போது கால்கள் சிக்கி இறந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

