/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலோக கலவைக்கு சிறந்த மாற்றாக 'பில்லர் ஸ்லாப்' வந்தாச்சு தெரியுமா?
/
உலோக கலவைக்கு சிறந்த மாற்றாக 'பில்லர் ஸ்லாப்' வந்தாச்சு தெரியுமா?
உலோக கலவைக்கு சிறந்த மாற்றாக 'பில்லர் ஸ்லாப்' வந்தாச்சு தெரியுமா?
உலோக கலவைக்கு சிறந்த மாற்றாக 'பில்லர் ஸ்லாப்' வந்தாச்சு தெரியுமா?
ADDED : மே 10, 2025 02:03 AM

கட்டுமான துறையில் இன்று புதுமையான பொருட்களின் வருகை அதிகரித்துள்ளது. அதுவும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப எதையும் தாக்குப்பிடிக்கும் தன்மையுடைய பொருட்கள், சந்தைகளில் கால்பதித்து வருகின்றன. தற்போது, சுற்றச்சூழலை பாதுகாக்கும் வகையில், மாற்றுப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஒரு காலத்தில் செங்கல், மணல் கொண்டு பாரம்பரிய முறையில் மட்டுமே வீடுகள் அமைக்கப்பட்டன. இன்று, பிளை ஆஷ் கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் என மாற்றுப்பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.
கட்டடக் கலையில், முக்கிய இடம் பிடிப்பது மேற்கூரை. அந்த வகையில் 'பால்ஸ் சீலிங்' என்பது கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஒரு இரண்டாம் நிலை மேற்கூரை.
இது முதன்மை மேற்கூரையின் கீழ் நிறுவப்படும் ஒரு குளிர்சாதன மற்றும் அலங்கார அமைப்பாக உள்ளது. ஜிப்சம், பி.ஓ.பி., கண்ணாடி பால்ஸ் சீலிங், மரம் சீலிங், யு.பி.வி.சி., பி.வி.சி., சீலிங் என பல வகைகள் உள்ளன.
தொலைத்தொடர்பு மற் றும் மின் கம்பிகளை மறைக் கவும், குளிர்சாதன செயல்பாட்டை மேம்படுத்தவும், ஒலியைக் குறைக்கவும், அக்னி பாதுகாப்புக்கு பால்ஸ் சீலிங் பயன்படுத்தப்படுகிறது. இதை அழகுக்கு அமைக்க வேண்டும் என்றாலும் வேறு புது வகைகள் உள்ளன என்கிறார், 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் டேனியல்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
கட்டடத்தின் கூரை பகுதிகளில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உலோக கலவைக்கு மாற்றாக பயன்படுத்தி எடை குறைப்பது 'பில்லர் ஸ்லாப்'. இதற்கான அமைப்பில் 'டெரகோட்டா' செங்கல், மண் பானைகள், கீற்று செங்கல், கண்ணாடி பாட்டில்கள் இடம்பெறுகின்றன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் சேர்வதால், இயற்கையை பாதுகாக்க உதவும்; கட்டுமான செலவையும் குறைக்கலாம். டெரகோட்டா போன்ற இயற்கை பொருட்கள் வெப்பத்தை ஈர்த்து, அறையின் உள்வெப்பத்தை குறைக்கும்.
இது பாரம்பரிய கட்டடக்கலையில், ஒரு நவீன கட்டுமான முறையாகும். குறிப்பாக வீடுகளுக்கு பொருத்தமான ஒரு நுண்ணறிவு திட்டமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.