/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றலை மதிப்பிடுவதில் சிக்கல்
/
மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றலை மதிப்பிடுவதில் சிக்கல்
மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றலை மதிப்பிடுவதில் சிக்கல்
மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றலை மதிப்பிடுவதில் சிக்கல்
ADDED : ஆக 27, 2025 10:48 PM
கோவை; அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் காலாண்டு தேர்வில், மாணவர்களின் கற்றலை மதிப்பிடும் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமென, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மெல்லக் கற்கும் மாணவர்களின் அடிப்படை கற்றலை மேம்படுத்தும் நோக்கில், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும், 'போக்கஸ் லேர்னர்ஸ்' என்று அழைக்கப்படும், தனி கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, 'திறன்' திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களின் வாசிக்கும் திறன், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குத் திறன் மேம்படுகிறதா என்பதை வாரந்தோறும் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் கண்காணிக்க, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது காலாண்டுத் தேர்வுக்கான அட்ட வணை வெளியாகியுள்ள நிலையில், திறன் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, எவ்வாறு தேர்வு நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில், பள்ளி கல்வி இணை இயக்குனர் தலைமையில் நடந்த இணையவழி கூட்டத்தில், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு, தனி வினாத்தாள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
மீதமுள்ள, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், இம்மாணவர்களின் கற்றல் திறனை எவ்வாறு மதிப்பிடுவது என்ற குழப்பம், ஆசிரியர்கள் இடையே எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், '30 நாட்களுக்கு இம்மாணவர்களுக்கு, தனி வகுப்புகள் நடத்த வேண்டும். இம்மாதத்தில் விடுமுறை நாட்கள் மற்றும் கலைத் திருவிழா போன்ற நிகழ்வு களால், வகுப்புகள் முழுமையாக நடைபெறவில்லை.
செப்., துவக்கத்தில் மேலும் 10 நாட்களுக்கு, வகுப்பு எடுக்க வேண்டியுள்ளது. ஒரு மாணவர், ஒரு பாடத்தில் மட்டும் பின்தங்கியிருந்தாலும், திறன் திட்டத்தில் கற்பிக்க வேண்டியுள்ளது.
செப்.15ல் துவங்கும் காலாண்டுத் தேர்வில், இத்திட்ட மாணவர்களின் கற்றலை எவ்வாறு மதிப்பிடுவது எனும் பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும்' என்றனர்.