தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘செரிமானம் குறைந்த மழைக்காலம் நோய்களில் இருந்து காக்க வேண்டும்’

‘செரிமானம் குறைந்த மழைக்காலம் நோய்களில் இருந்து காக்க வேண்டும்’

‘செரிமானம் குறைந்த மழைக்காலம் நோய்களில் இருந்து காக்க வேண்டும்’


UPDATED : நவ 13, 2026 06:10 PM

ADDED : நவ 13, 2026 06:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 06:10 PM ADDED : நவ 13, 2026 06:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரமடை: மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து, காரமடை அருகே உள்ள தோலம்பாளையம் அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகம், மருத்துவர் மேகலை கூறியதாவது:-

மழைக்காலத்தில் குளிர் காற்றால் உடலில் வாதம், பித்தம் அதிகரித்து, உடல் பலமும் செரிமானத் திறனும் குறைந்திருக்கும். இந்த காலத்தில் உடலுக்கு எண்ணெய் மசாஜ், மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு சுவை, பால் சார்ந்த உணவுகள் மற்றும் வெதுவெதுப்பான நீரைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக காரம், கசப்பு, துவர்ப்பு மற்றும் குளிர்ந்த உணவு தவிர்க்க வேண்டும்.

மழைக்காலத்தில் ஏற்படும் செரிமான கோளாறு, சளி, காய்ச்சல் மற்றும் மூட்டு வலியை தடுக்க செரிமானத்திற்கு 'அஷ்ட சூர்ணம்', 'திரிகடுகு சூர்ணம்', நோய் எதிர்ப்பு சக்திக்கு 'தசமூல கடுத்த்ரேயம் கஷாயம்', காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு 'வியாக்கிராதி கஷாயம்' ஆகிய மருந்துகள் பயனளிக்கும்.

எனினும், ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப மருந்தின் அளவு மாறுபடும் என்பதால், தகுதி பெற்ற ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us