/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிஜிட்டல் சர்வே பணி; 99 சதவீதம் நிறைவு
/
டிஜிட்டல் சர்வே பணி; 99 சதவீதம் நிறைவு
ADDED : நவ 20, 2024 10:25 PM
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு வட்டாரத்தில், பயிர் சாகுபடி குறித்த, வேளாண் துறையின் டிஜிட்டல் சர்வே பணிகள், 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
வேளாண் துறை சார்பில் தமிழகம் முழுவதும் டிஜிட்டல் சர்வே பணிகள் நடந்து வருகிறது. கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை, தக்காளி, வாழை, புடலை, நிலக்கடலை உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக, வேளாண் துறையினர், டிஜிட்டல் சர்வே பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை, 99 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், 'டிஜிட்டல் சர்வே பணிகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், ஒரு சில இடம் மட்டும் சர்வே செய்ய இயலவில்லை. கிராமப்புறங்களில் சில இடங்களில் நெட்ஒர்க் பிரச்னை, சர்வே எண் மற்றும் இடத்தின் உரிமையாளர் பெயரில் டாக்குமெண்டில் உள்ள பிழைகள் என, பல பிரச்னைகள் உள்ளன. இந்த பிரச்னைகளை பட்டியலிட்டு மேலிடத்திற்கு அனுப்பியுள்ளோம். வரும் நாட்களில் இது சரி செய்யப்படும். இப்பணிகள் நிறைவடையும் போது, சாகுபடி குறித்த முழு விபரம் கிடைக்கும். அரசு நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்டவை எளிதாகும்,' என்றனர்.

